அந்தியோதயா ரயிலுக்கு நேரவிருந்த பெரும் விபரீதம்.. அரண்டு போன பயணிகள்

அந்தியோதயா ரயிலுக்கு நேரவிருந்த பெரும் விபரீதம்.. அரண்டு போன பயணிகள்
Published on

அம்பாத்துரை மற்றும் கொடைக்கானல் ரயில் நிலையம் இடையே, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மர்மநபர்களால் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களும் அதன் மீது பெரிய சுண்ணாம்புக்கல்லும் வைக்கப்பட்டிருந்தது. இதன்மீது, ரயிலின் என்ஜின் பட்டு, சுண்ணாம்புக்கல் நொறுங்கியது. மேலும், தண்டவாளத்தின் பல இடங்களில் கற்கள் குவிக்கப்பட்டிருந்ததால், ரயிலானது நிறுத்தப்பட்டு, அவை அப்புறப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக, 9 நிமிட கால தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டது. இதே பகுதியில், கடந்த 9ஆம் தேதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது, குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com