Anthiyur | Ambulance | அந்தியூர் அருகே மலைப்பாதையில் ஆம்புலன்ஸுக்குள் பிறந்த ஆண் குழந்தை
Anthiyur | Ambulance | அந்தியூர் அருகே மலைப்பாதையில் ஆம்புலன்ஸுக்குள் பிறந்த ஆண் குழந்தை
Anthiyur | Ambulance | அந்தியூர் அருகே மலைப்பாதையில் ஆம்புலன்ஸுக்குள் பிறந்த ஆண் குழந்தை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸிலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த ரோஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வலி தீவிரமடைந்தது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் பூபதி, ஓட்டுநர் குமரேசன் உதவியுடன் ஆம்புலன்ஸை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்தார். பின்னர் தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் இருந்தனர்.
