சென்னையை சுற்றிவளைத்த `ANPR’ - விதி மீறினால்இனி பத்தே நொடிகளில் நீங்கள் சிக்குவீர்கள்

x

சென்னையில் மேலும் 205 இடங்களில் ஏஎன்பிஆர் கேமரா

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில், மேலும் 205 இடங்களில் ஏ.என்.பி.ஆர். கேமரா பொருத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

சென்னையின் முக்கிய சாலைகளில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக அசோக்பில்லர், பாரிமுனை, ராயப்பேட்டை உள்பட 9 முக்கிய சாலைகளில் 205 இடங்களில் தனியாக பில்லர் அமைத்து ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

தற்போது, சாப்ட்வேரை கேமராக்களில் பொருத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஹெல்மெட் போடாதது, சீட் பெல்ட் அணியாதது, ஸ்டாப் லைனை தாண்டி வாகனத்தில் நிற்பது, சிவப்பு சிக்னலை மீறுவது, அதிவேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகன பதிவெண்களை அந்தக் கேமரா உடனே படம்பிடித்து, சம்பந்தப்பட்ட வண்டி உரிமையாளரின் செல்போனுக்கு 10 நொடிகளில் குறுஞ்செய்தி வடிவில் நோட்டீஸ் அனுப்பும் வசதி கொண்டுள்ளது. எனவே, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தப்பவே முடியாத அளவிற்கு சென்னையில் ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்