Erode Girl Missing| தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. இன்று ஸ்கூல் கேட் வரை வந்த சிறுமி திடீர் மாயம்

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. இன்று ஸ்கூல் கேட் வரை வந்த சிறுமி திடீர் மாயம்

#schoolstudentmissing #erodegirlmissing

அந்தியூரில் பள்ளிக்கு சென்று 13 வயது சிறுமி மாயம் - போலீசார் விசாரணை ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே உள்ள சென்னாம்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், பருவாச்சியில் உள்ள கல்வி நிறுவன விடுதியில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகளான 13 வயது சிறுமி அதே பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை பள்ளிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து சென்ற சிறுமி, பள்ளிக்குச் சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. பள்ளி நுழைவாயில் வரை சீருடையில் வந்துவிட்டு சிறுமி மாயமானதாகப் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com