டிரைவரை செருப்பால் தாக்கிய மேலதிகாரிக்கு அடுத்த அதிர்ச்சி
டிரைவரை செருப்பால் தாக்கிய மேலதிகாரிக்கு அடுத்த அதிர்ச்சி - மன்னிப்பு கேட்டு வீடியோ போட்டும் பயனில்லை. ஓட்டுனரை காலணியால் தாக்கிய விவகாரம் - உதவி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு . மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டைம் கீப்பர் அலுவலகத்தில் கடந்த 9 தேதி இரவு தாராபுரம் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்தும் அவதூறாக பேசியதாக கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
Next Story