Nellai | Manjolai | மாஞ்சோலை மக்களுக்கு இறங்கிய அடுத்த பேரிடி
Nellai | Manjolai | மாஞ்சோலை மக்களுக்கு இறங்கிய அடுத்த பேரிடி #nellai #manjolai #manjolaiestate #thanthitv மாஞ்சோலை பகுதியில் இருந்து விடைபெற்ற தபால் நிலையங்கள் நெல்லை மாவட்டம் அம்பை மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் இருந்து தபால் நிலையங்கள் முற்றிலுமாக விடை பெற்றுள்ள சம்பவம் அங்குள்ள தொழிலாளர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வந்த தேயிலைத் தோட்ட நிறுவனம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அதன் உற்பத்தியை நிறுத்திய நிலையில், தொடர்ந்து அங்கேயே வசிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தொழிலாளர்கள் கீழே இறங்க மறுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், மாஞ்சோலையில் உள்ள தபால் நிலையமும் மூடப்பட்டது. தபால் நிலையத்தில் இருந்த பொருட்களை லாரி மூலம் தபால் நிலைய ஊழியர்கள் ஏற்றிச் சென்றனர். அஞ்சல் உள்ளிட்ட சேவைகளுக்கு, அம்பையில் உள்ள தலைமை தபால் நிலையத்தை அணுகுமாறு அஞ்சல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாஞ்சோலை பகுதிகளில் ரேஷன் கடை, பள்ளிக்கூடம் உள்ளிட்டவை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
