ஸ்ரீநகரில் மீண்டும் ஒரு மருத்துவர் மீது தாக்குதல்.. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

x

ஸ்ரீநகரில் மேலும் ஒரு மருத்துவர் மீது தாக்குதல் - போராட்டம்

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் உதவியாளர், பணியில் இருந்த மருத்துவரை தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் சிகிச்சையின்போது உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள், அலட்சியத்துடன் செயல்பட்டதாகக்கூறி பெண் மருத்துவரை தாக்கினர். ஒரே வாரத்தில் 2 மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களால் மருத்துவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்