மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மேலும் 20 மாணவிகள் புகார்

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மேலும் 20 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மேலும் 20 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீதும் புகார் எழுந்தது. அந்த பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன் மீது முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆனந்தன் மீது மேலும் 20 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ளதால் அவை குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com