வேளாங்கண்ணி மாதா பெரிய தேர் பவனி - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி மாதா பெரிய தேர் பவனி - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Published on

புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயிலில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ், அ்ம்புரோஸ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, உத்திரிய மாதா, அந்தோணியார் உள்ளிட்ட சிறிய தேர்கள் முன்னேவர, அதன்பின், பெரிய சப்பரத்தில் புனித ஆரோக்கிய மாதா அன்னை தேர் பவனி நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள், மலர்களைத் தூவி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தேர் பவனியை ஒட்டி, வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டிருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com