அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

x

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் மாதம் 16ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் கல்லூரி துவங்குவது குறித்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ளார் . அதன்படி ஜூன் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்