``PTR மகன்கள் படித்தது இந்த மொழியில் தான்'' - அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

x

ஆங்கிலம், பிரெஞ்சு இருமொழிக் கொள்கையா?... அண்ணாமலை கேள்வி

இருமொழிக் கொள்கை தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில் தான் படித்தார்கள் என்று அமைச்சர் கூறியிருக்கிறார் என்றும், ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை சொல்ல மறந்துவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ்....இது தான் உங்கள் இரு மொழிக் கொள்கையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரின்

இரு மகன்களுக்கு கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான், கேட்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்