Annamalaiyar Temple News | அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை வருமான விவரம் வெளியானது..!

x

அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3.47 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 3 கோடியே 47 லட்சத்து 82 ஆயிரத்து 527 ரூபாய், வருவாயாக கிஅடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் காலை முதலே நடைபெற்றது. இதில் 112 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ 910 கிராம் வெள்ளி ஆகியற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். மேலும் கோயில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 100க்கும் மேற்பட்டோர் இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்