சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம், தோட்டக்கலை, செவிலியர் உள்ளிட்ட படிப்பிற்கான கலந்தாய்வு பல்கலைக்கழக இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும், மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆகஸ்டு 17ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.