அமித் ஷா கூட்டத்தை தவிர்த்த அண்ணாமலை... அரசியல் அரங்கில் சலசலப்பு
அமித் ஷா கூட்டத்தை தவிர்த்த அண்ணாமலை... அரசியல் அரங்கில் சலசலப்பு
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக மைய குழு கூட்டத்தை அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தவிர்த்தது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருப்பினும், அண்ணாமலை பங்கேற்காமல் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டது பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்தது. அதன்பின்னர் செய்தியாளர்களையும் சந்திக்காமல் அண்ணாமலை மதுரை நோக்கிப் புறப்பட்டு சென்றார்.
Next Story
