துப்பாக்கியால் சுட்டு அசரவிட்ட அண்ணாமலை.. வைரலாகும் வீடியோ..

x

புதுக்கோட்டை அருகே நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஐந்து முறை இலக்கை நோக்கி சுட்டு அசத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கோப்பை உட்பட பல்வேறு கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஷூட்டிங் ரேஞ்சில் நின்று துப்பாக்கியால் ஐந்து முறை இலக்கை நோக்கி சுட்டு அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்