Annamalai | BJP | கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் | பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை

Annamalai | BJP | கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் | பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை

"திமுக செய்ததாக கூறும் ஆலய திருப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்" சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்ணிண் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசின் கடந்த 5 ஆண்டு கால கோவில் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த 2022ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து, சமீபத்தில் முதல்வர் திறந்து வைத்த மண்டபங்கள் இடிந்து விழுவது திமுக அரசு ஆலய திருப்பணிகளை எந்தத் தரத்தில் மேற்கொண்டது என்பதற்கு வெளிப்படையான சான்றாவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com