Annamalai | Bahrain | பக்ரைனில் இறந்த தமிழர் - அண்ணாமலை உதவியால் தாயகம் வந்த உடல்
Annamalai | Bahrain | பக்ரைனில் இறந்த தமிழர் - அண்ணாமலை உதவியால் தாயகம் வந்த உடல்
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த ராமநாதபுரம் அரசத்தூரை சேர்ந்த சுப்பு என்பவரின் உடல் நீண்டப் போராட்டங்களுக்கு பிறகு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உதவியால் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் வறுமை காரணமாக வெளிநாடு சென்ற சுப்பு, பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சுப்பு இறந்ததால், அவரது முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர். இதை அறிந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பக்ரைன் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, சட்ட ரீதியான சிக்கல்களைக் களைந்து சுப்புவின் உடலை தாயகம் கொண்டு வர உதவியுள்ளார்.
