சதுரகிரி மலையில் அன்னதான கூடங்கள் மூடல் - பக்தர்கள் அவதி...

சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள அன்னதான கூடங்களை அலுவலர்கள் மூடியதால் உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
சதுரகிரி மலையில் அன்னதான கூடங்கள் மூடல் - பக்தர்கள் அவதி...
Published on
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக 5க்கும் மேற்பட்ட தனியார் அன்னதான கூடங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் அதிகாரிகள் அன்னதான கூடங்களை மூடினர். இதையடுத்து அங்குள்ள தனியார் கடைகளில் திடீரென உணவு பண்டங்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல்களையும் வனத்துறையினர் அகற்றியதால் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. போதிய குடிநீர், உணவு கிடைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com