அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தனி நபர் குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு
Published on

இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். துணைவேந்தர் சூரப்பா மீதான பல்வேறு புகார்கள் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான தனிநபர் குழு விசாரிக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அரசின் முடிவுக்கு எதிராக செயல்படுவது, அரியர் விவகாரம்,சிறப்பு அந்தஸ்த்து விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமே நிதி திரட்டும் என்று மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது உள்ளிட்ட பல விவகாரங்களில் உள்நோக்கத்துடன் சூரப்பா செயல்பட்டு வந்ததாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, இந்த தனி நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com