

பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்த, தமிழக அரசிடம், அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி கோரி உள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து, அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்திய, அனைத்து அரியர் மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க அண்ணா பல்கலைக்கழகம், அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.