"இனி ஆன்லைன் முறையில் தேர்வு தாள்கள் திருத்தப்படும்" - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தகவல்

அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வு தாள்கள் திருத்தப்படும் என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
"இனி ஆன்லைன் முறையில் தேர்வு தாள்கள் திருத்தப்படும்" - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தகவல்
Published on

அடுத்த பருவத்தேர்வு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வு தாள்கள் திருத்தப்படும் என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை துணை வேந்தர் சூரப்பா வழங்கினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த சூரப்பா , அடுத்த பருவதேர்வு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு தாள்கள் திருத்தப்படும் என்று தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட சூரப்பா, அதற்கு உரிய நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com