பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு நிலையான இயக்க விதிமுறைகளை வகுத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
Published on
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், வகுப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடக்குறிப்புகள் மற்றும் விளக்கங்களை மின்னஞ்சல், வாட்ஸ்அப் ஆகியவற்றில் வழங்கிட வேண்டும் என்றும்
கல்லூரிகளில் உள்ளே வரவும், வெளியே செல்லவும் என இரண்டு வாயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பேராசியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தினமும் தங்கள் உடல்நலன் குறித்த விவரங்களை படிவத்தில் பதிவு செய்து வழங்குவது கட்டாயம் என்றும் கல்லூரிக்குள் வரும் அனைவருக்கும் வெப்ப சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பில் மாணவர்கள் அமரவைக்கப்பட வேண்டும் எனவும் கல்லூரி பேருந்துகளில் 2 நபர்கள் ஒரே இருக்கையில் அமரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com