அண்ணா பல்கலை.யில் தகுதியற்ற 135 பேரை நியமனம் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் உள்பட தகுதி இல்லாத 135 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஐவர் குழு அறிக்கை அளித்துள்ளது.
அண்ணா பல்கலை.யில் தகுதியற்ற 135 பேரை நியமனம் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Published on

கடந்த 2007-ல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு, அண்ணா பல்கலைக் கழக கிளை அமைக்கப்பட்டது. இவை, 2012 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனம் முறையாக செய்யவில்லை என புகார் எழுந்தது. இதை அடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனங்கள் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்த குமார் தலைமையில் 5 பேர் குழுவை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில், தமிழக அரசு அமைத்தது. விசாரணையில், பல்கலைக்கழக இணைப்பின் போது பேராசிரியர்கள் உள்ளிட்ட 135 பேர், விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை பணி நீக்கம் செய்யுமாறும், முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், 5 பேர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com