பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அரசாணை வெளியிட்டுள்ளார்
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது
Published on

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் 35 -ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேசமயம், பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50 -ல் இருந்து 45 ஆகவும்,பி.சி., எம்.பி.சி, பி.சி. முஸ்லீம் ஆகிய பிரிவினருக்கான மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், பொறியியல் படிப்புகளில் சேரும் பட்டியலின மற்றும், பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com