அண்ணாவின் 51-வது நினைவு தினம் - பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் அஞ்சலி

அண்ணாவின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் 51-வது நினைவு தினம் - பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் அஞ்சலி
Published on

மயிலாடுதுறை பேருந்து நிலைய வாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் திமுகவினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவையில் அதிமுகவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலம் சென்ற அக்கட்சியினர், அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அக்கட்சியினர் பேரணியாக வந்து, புதிய மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். இதைபோல் தூத்துக்குடி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com