அண்ணா பிறந்தநாளையொட்டி 130 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்தநாளையொட்டி 130 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு
Published on
அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் 100, தீயணைப்பு துறையில் 10, சிறைத்துறையில் 10, ஊர்க்காவல்படையில் 5, விரல்ரேகை மற்றும் தடயஅறிவியல் துறையில் 5 என மொத்தம் 130 பதக்கங்கள் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். மேலும் மணல் திருட்டை தடுக்கும் போது உயிர்நீத்த காவலர் ஜெகதீஷ் துரைக்கு, முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கமும், அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வெகுமதியும் வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com