SIR பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி
கும்பகோணம் அருகே SIR பணியின் போது மாநகராட்சி ஆணையர் தரக்குறைவாக பேசியதாக கூறி, அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொற்கை பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியரான சித்ரா, வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டிருந்தார்.
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், சித்ராவை தொடர்பு கொண்டு நாளைக்குள் 200 விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சித்ரா, வீட்டில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க கோரி கும்பகோணம் அரசு மருத்துமனையின் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
