மனைவியை கூப்பிட வந்த கணவருக்கு 100 வகையான உணவுடன் மாமியார் கொடுத்த சர்ப்ரைஸ்

காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்ன குமாரிக்கும், காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு மாதம், ஆடி மாதத்தைப் போன்று, தெலுங்கில் ஆஷாட மாதம் என்பதால், ரத்தினகுமாரி, ரவி தேஜா தம்பதி பிரிந்திருந்தனர். ஆஷாட மாதம் முடிந்து, சிராவண மாதம் பிறந்துள்ளதால், மனைவியை அழைத்து செல்ல தமரோட கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு ரவி தேஜா வந்தார். அவருக்கு அவருடைய நூறு வகையான பலகாரங்களுடன் கூடிய விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார். இதைப் பார்த்து, மருமகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com