கணவனை மீட்க கோரி இளம்பெண் மனு - ஆந்திர போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு

ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமது கணவரை மீட்டுத்தரக் கோரி, இளம்பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கணவனை மீட்க கோரி இளம்பெண் மனு - ஆந்திர போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு
Published on

ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமது கணவரை மீட்டுத்தரக் கோரி, இளம்பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டி வரும் தமது கணவர் ரவிச்சந்திரன் மீது, அரிசி கடத்தியதாக ஆந்திர போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் கூறும் தினத்தன்று தமது கணவர் வேலைக்கு செல்லவில்லை எனவும், உடனடியாக அவரை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com