

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அய்யனாரப்பன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை எழுப்பிய ஆதிசின்னபூசாரி, குமார கொண்டப்ப நாயக்கர் என்ற மன்னர் தனது இரு மனைவிகளுடன் இருக்கும் சிலை மற்றும் முத்துக்கவிராயர் என்ற கவிஞரின் சிலை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.