அத்திக்கடவு திட்டத்தை உதாரணம் காட்டி கேள்வி எழுப்பிய அன்புமணி

x

நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்

80 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய

நந்தன்கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீரனூர் அணையை அன்புமணி நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 90 ஆண்டு காலமாக நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேறாமல் உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், 36 ஏரிகள் நேரடியாகவும், 50க்கும் மேற்பட்ட ஏரிகள் மறைமுகமாகவும் பயன்பெறும் என்றார். மேலும் 22 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் என்றும், நிலத்தடி நீர் உயரும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்