Dharmendra Pradhan | Anbil தர்மேந்திர பிரதானுக்கு கிடைத்த பதிலடி

x

தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் தமிழக கல்வி திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பது ஏன்? என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் ஆயிரத்து 635 பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும், 58 ஆயிரத்து 779 பள்ளிகள், மாநில பாடத்திட்டத்தையும் பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு எத்தகைய திட்டம் தேவை என்பதை இதுவே தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், தேவையில்லாமல் தமிழகத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்