சாலையில் நிறுத்தப்பட்ட ஆனந்த் கார்- போலீசாருடன் தவெகவினர் வாக்குவாதம்

x

திருச்சியில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வாகனம் சாலையில் நின்றதால், அதை எடுக்குமாறு கூறிய போலீசாருடன் தவெக தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர்.

தவெக தலைவர் விஜயின் சுற்றுப் யணத்திற்கு காவல் துறை அனுமதி கேட்க திருச்சி வந்த என்.ஆனந்த், விமான நிலையம் எதிரில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடைய வாகனம் சாலையில் நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, அதை அகற்றுமாறு போலீசார் கூறியுள்ளனர். அப்போது, போலீசாரிடம் தவெக தொண்டர்கள் வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்