Cuddalore Rains| அனாமத்தா போச்சு.. திடீர் கனமழையால் நேர்ந்த சோகம்

அனாமத்தா போச்சு.. திடீர் கனமழையால் நேர்ந்த சோகம்

#paddy #cuddalorerains

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கிய 250 ஏக்கர் சம்பா பயிர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 250 ஏக்கர் சம்பா பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள நெடுஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சுமார் 250 ஏக்கரில் சம்பா பயிர் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், மழையின் காரணமாக வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com