Kallakurichi MLA Issue|கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம்..1 வாரம் கெடு

கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம்..1 வாரம் கெடு

கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம்.. மாறிய சீன்.. 1 வாரம் கெடு விதிப்பு #kallakurichimlaissue #kallakurichicollectorissue கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிடம், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தவறாக நடந்து கொண்டதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடுகள் இன்றி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியமும் பாதுகாப்பும் எவ்வித சமரசமுமின்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

X