ஆபத்தை உணராமல் பெரியவர் செய்த செயல்.. கடுப்பாகி துரத்தி வந்த யானை

x

சத்தியமங்கலத்தில் ஆபத்தை உணராமல் யானையின் அருகே செல்பி எடுத்த நபரை யானை துரத்திய காட்சி வெளியாகியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் சாலையில் நடமாடுகின்றன. இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் சாலையோரத்தில் நடமாடிய காட்டு யானையிடம், அவ்வழியே காரில் சென்ற பயணி ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யானை அவரை துரத்த தொடங்கியது. இதனையடுத்து பயணி ஓடிச்சென்று காரில் ஏறி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்