Thanjavur Incident | செல்ல நாயை காப்பாற்ற சென்று உயிரையே விட்ட மூதாட்டி | தஞ்சையில் சோகம்

செல்ல நாயை காப்பாற்ற சென்று உயிரையே விட்ட மூதாட்டி | தஞ்சையில் சோகம்

Thanjavur Incident | செல்ல நாயை காப்பாற்ற சென்று உயிரையே விட்ட மூதாட்டி | தஞ்சையில் சோகம் #thanjavur #dog #oldwoman #thanthitv அறுந்து கிடந்த மின்கம்பியை கடித்த நாயை காப்பாற்ற சென்ற மூதாட்டி பலி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, அறுந்து கிடந்த மின்சார கம்பியை கடித்த வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற மூதாட்டி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிடைமருதூரை சேர்ந்த 55 வயதான விஜயா, வீட்டின் எதிரே கிடந்த தனது வளர்ப்பு நாயை எழுப்ப முயன்றுள்ளார். அப்போது, மின்சார கம்பியை கடித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்த நாயைத் தொட்ட மூதாட்டியும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் மின்சாரத்தை துண்டித்து, மூதாட்டியை திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com