20 லட்சத்தில் அடிக்கல் நாட்ட சென்ற MLA.. வாக்குவாதம் செய்த மக்களால் பரபரப்பு

x

நிழற்குடை அமைக்க அடுத்தடுத்து எதிர்ப்பு - விழிபிதுங்கிய அதிகாரிகள்

கல்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க அடுத்தடுத்து 2 இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் தலா 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நிழற்குடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் பனையூர் எம். பாபு நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி, நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்ட சென்றபோது கடைக்காரர் ஒருவர் தனது கடைக்கு எதிரே நிழற்குடை அமைக்க கூடாது என வாக்குவாதம் செய்தார்.

இதனால் வேறு இடத்தில் அடிக்கல் நாட்ட முயன்றபோது அங்கும் நிழற்குடை அமைக்க ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நேர பரபரப்புக்கு பிறகு வேறு இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்