காட்டுக்குள் இருந்து வந்து திடீரென வாகனங்களை விரட்டிய யானை - அலறிய மக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று வாகனங்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று, கரும்பு ஏற்றி வந்த லாரியை பின் தொடர்ந்து சென்று கரும்புகளை தும்பிக்கையால் சரித்து சாப்பிட்ட நிலையில், திடீரென பின் நின்ற மற்ற வாகனங்களை துரத்த துவங்கியது. பின்னர் சிறிது நேரம் நெடுஞ்சாலையில் உலாவிய நிலையில் காட்டுக்குள் சென்று மறைந்தது
Next Story
