கார் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது காரை ஏற்றி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீஸ் விசாரணை
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையம் விஐபி கார்டன் பகுதியில் சேர்ந்தவர் சசிகலா (வயது 75.)
இவர் கோவில்பாளையம் அன்னூர் சாலையில் சாலையின் ஓரத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த சாலை வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சசிகலாவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது
இந்த விபத்தில் சசிகலா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
