பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

x

சென்னையில் பப்பாளி பழம் பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 55 வயதுடைய முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள பப்பாளி மரத்தில் பப்பாளி பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி அருகில் இருந்த கிணற்றில் ஸ்ரீனிவாசன் விழுந்தார். இது குறித்து அவரின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் முதியவரை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்