Marraige| `முறை' செஞ்ச நகையால் திருமணம் நடுவே பூகம்பம்.. கதவை உடைத்து உக்கிரமாக தாக்கி ரகளை
`முறை' செஞ்ச நகையால் திருமணம் நடுவே பூகம்பம்.. கதவை உடைத்து உக்கிரமாக தாக்கி ரகளை
#marriage #chain மொய் நகை விவகாரத்தில் மோதல் - சிறுவன் மீது தாக்குதல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, திருமண நிகழ்ச்சியில் மொய்யாக வழங்கப்பட்ட நகை தொடர்பான தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அழகுபெருமாள்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் தனசேகர் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் வீடுகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், தனசேகர் தரப்பினர் ரமேஷின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ரமேஷின் 14 வயது மகன் பிரசாத், இரும்பு பைப்பால் தாக்கப்பட்டு காயமடைந்தார். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
