தென்னை மரத்தில் மோதிய கழுகு - வலியில் அலறி துடித்து ஓடிய மக்கள்

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிங்கவாடி அருகே சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது தோட்டத்தில் ஆடு,மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்த தேனிக்கள் கூட்டின் மீது கழுகு மோதியதில் மலைதேனீக்கள் கூட்டமாக மகாராஜன், அவரது மனைவி மீனா மகள்கள் உள்ளிட்ட 7 பேரை கடித்துள்ளன. இதில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்