Amul Milk | அமுல் பால் விலை உயர்வதாக அறிவிப்பு

Amul Milk | அமுல் பால் விலை உயர்வதாக அறிவிப்பு

பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயரும் என அமுல் நிறுவனம் அறிவிப்பு இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான அமுல் (Amul), நாடு முழுவதும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமுல் நிறுவனத்தைத் தொடர்ந்து மதர் டெய்ரி (Mother Dairy) நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மாட்டுத் தீவனம், பால் பேக்கிங் கவர்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்விற்குக் காரணம் என குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் முதன்முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com