அம்மன் கோவில் தீமிதி திருவிழா - ஊர்வலம் வந்து தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

x

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஏ.புளியங்குடி பகுதியில் உள்ள ஸ்ரீ நவகாளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் ஊரின் பல்வேறு வீதிகளில் ஊர்வலமாக வந்து மேள தாளங்கள் முழங்க தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்