தமிழ்நாட்டில் பிடித்த உணவு குறித்து அமித்ஷா பதில்

x

தமிழ்நாட்டில் பிடித்த உணவு குறித்து அமித்ஷா பதில்

தமிழ் மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

தினத்தந்தி நாளிதழுக்கு அமித்ஷா அளித்த சிறப்பு பேட்டியில், ஆங்கில மொழிக்கு எதிராக கடுமையாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும் என்றும்,

2047க்குள் இந்தியர்கள் அனைவரும் தங்களது பிராந்திய மொழிகளில் பேச வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

தாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்று கூறிய அமித்ஷா, தமிழ் மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும்...

அதுபோலவே அசாமிஸ், குஜராத்தி, மராத்தி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு தங்களின் அழுத்தத்தால் தான் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து பதிலளித்த அமித்ஷா, எந்த அழுத்தமும் இல்லை...

மோடி அரசு சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் கட்சியைப் போன்று துரோகம் செய்தது யாரும் இல்லை என்று தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் விரக்தியை காட்டுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்கவும், பெருகிய சுற்றுலாவையும், பயங்கரவாதத்தில் இருந்து விலகிய இளைஞர்களையும் பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

எல்லை பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, நாடு இப்போது எல்லை பாதுகாப்பில் பலமாக உள்ளதாகவும், இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-வங்காளதேசம், இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேச எல்லைகளில் ஊடுருவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தேச எல்லை வழியாக எதற்காகவும் யாராக இருந்தாலும் ஊடுருவும்போது, அந்த நாடு தர்மசத்திரமாக செயல்பட்டால் செழித்தோங்கி வளர முடியாது என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.க தேசிய தலைவராக யார் வரப்போகிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, இன்னும் அது முடிவாகவில்லை... ஆனால் மிக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்​​.

தமிழ்நாட்டில் பிடித்த இடம், விருப்ப உணவு குறித்து பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனக்கு சாம்பார் சோறு மிகவும் பிடிக்கும்.. மிகவும் பிடித்த இடம் ராமேஸ்வரம் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்