Amitshah Madurai visit Speech |மதுரையில் பாஜகவினருக்கு அமித்ஷா போட்ட கட்டளை

x

டெல்லியில் ஆட்சி அமைத்ததுபோல 2026ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமித்ஷா, மதுரை மண் மாற்றத்திற்கான மண் என்றும், எதிர்வரும் தேர்தலில்

திமுகவை வெளியேற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

2024ல் ஒடிசாவில் முழு பலத்தோடு பாஜக ஆட்சி அமைத்த‌து.... ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது என்று கூறிய அமித்ஷா,,

மகாராஷ்டிர தேர்தலிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பாஜக பெற்றது என்றார்.

இந்த ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது எனக் கூறிய அமித்ஷா, டெல்லியில் ஆட்சி அமைத்த‌து போன்று, அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி, ஆட்சி அமைக்கும் எனப் பேசினார்.

10 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளைக்கூட திமுக நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டிய அமித்ஷா,,

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில்தான், பாஜகவினரின் சிந்தனை இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்