Amitshah On TVK Vijay | NDA கூட்டணியில் தவெக இணையுமா? - அமித்ஷா Exclusive பதில்

x

NDA கூட்டணியில் விஜய்யின் தவெக இணையுமா? - அமித்ஷா Exclusive பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா? என்பது குறித்து

தினத்தந்தி நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலை காணலாம்...

தினத்தந்தி நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த சிறப்பு பேட்டியில், தமிழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சுமத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமித்ஷா, கடந்த மன்மோகன்சிங் ஆட்சியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக தி.மு.க இருந்தபோது,

அந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அவர்கள் 1.53 லட்சம் கோடி பகிர்வுத்தொகையாக வழங்கியதாகவும், ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 5.48 லட்சம் கோடி வழங்கியுள்ளதாகவும்,

இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அளித்ததைவிட மூன்றரை மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சி காலத்தில் பெரிய முதலீடுகள் வரவில்லை... சட்டம்-ஒழுங்கு இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

பல தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன.... அதற்கு காரணம், தி.மு.க அரசு திட்டங்களுக்கு தேவையான நிலங்களை ஒதுக்க மறுப்பதால், மத்திய அரசு திட்டங்களை தொடங்க முடியாமல் இருப்பதாக தெரிவித்தார்.

வருகிற தேர்தலில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என தெரிவித்த அமித்ஷா, தமிழ்நாடு பா.ஜ.க.வில் அனைத்து தலைவர்களும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக செய்வதாக குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்யின் த.வெ.க, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது.... எனவே, இன்னும் சில காலம் காத்திருக்குமாறும், அனைத்தும் தெளிவாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு கட்சியில் திரைப்பட நடிகர்களை சேர்க்கப்போவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, அதைப்பற்றி உள்ளூர் கட்சியினர் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்