அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவிக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் பிறந்த தமிழகத்தில் படித்த மாணவிக்கு இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரியில் சேர்க்கை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவிக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

அமெரிக்காவில் பிறந்து தமிழகத்தில் படித்த மாணவி அபிராமிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆனால் அவர் குடியுரிமை சான்று சமர்ப்பிக்காததால் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியும் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிராமி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 12 வாரங்களில் குடியுரிமை சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், கல்லூரியில் மாணவியை சேர்க்க உத்தரவிட்டார். சமர்ப்பிக்க தவறினால் பிறருக்கு கிடைக்கும் வாய்ப்பு பறிபோய், அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் மாணவி 10 லட்சம் ரூபாயை செலுத்தி மற்ற சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com