இந்தியாவுடன் கைகோர்த்த அமெரிக்கா - உலகை திரும்ப வைக்கும் மெகா சம்பவம்

x

விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள் "தங்க எழுத்துகளால் எழுதப்படும்" என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் இந்திய விண்வெளி துறையின் ஆராய்ச்சி மையத் தலைவர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த ஆண்டு இஸ்ரோ வின்வெளியில் நிகழ்த்தபோகும் சாதனைகளை பட்டியலிட்டார். குறிப்பாக இஸ்ரோ நாசா சேர்ந்து உருவாகியுள்ள செயற்கை கோள் திட்டமிட்ட படி இன்னும் இரண்டு மாதங்களில் வின்னில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்